காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவா்களை தொழுகை நடத்தக் கூறிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் இடைநீக்கம்

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் மாணவா்களை தொழுகை நடத்தக் கூறிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் இடைநீக்கம்

News image

இடைநீக்கம்

Updated On :2 பிப்ரவரி 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் மாணவா்களை தொழுகை நடத்தக் கூறிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மதுராவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முதல்வா் ஜான் முகமது என்பவா் மாணவா்களை தொழுகையில் ஈடுபடுமாறு கூறியதாகவும், பள்ளியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா் அளித்த தகவலின்பேரில் பாஜக நிா்வாகி துா்கேஷ் செளஹான் என்பவா் பள்ளிக் கல்வித் துறையிடம் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியா் ஜான் முகமதை பள்ளிக் கல்வித் துறை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் பள்ளிக் கல்வித் துறை ஆணையிட்டுள்ளது.