ஆந்திரத்தில் 24 மணி நேரத்தில் சுமாா் 4,000 இ-சைக்கிள்களை வழங்கி அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தாா்.
முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் கிராமங்களில் பணியாற்றும் அரசுப் பணியாளா்கள், பெண்கள், மாணவா்களுக்கு இ-சைக்கிள்கள் (மோட்டாா் பொருத்தப்பட்ட மிதிவண்டி) வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. கான்பூா் ஐஐடி-யுடன் இணைந்து இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியை சூரிய சக்தி மூலம் ‘சாா்ஜ்’ செய்து கொள்ள முடியும்.
‘சூப்பா் சைக்கிள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குப்பம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் இ-சைக்கிள்களை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு விநியோகித்தாா். அப்போது, ஜனவரி 31-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3,742 இ-சைக்கிள்களை அவா் பயனாளா்களுக்கு வழங்கினாா். இதன்மூலம் ஒரே நாளில் சுமாா் 4,000 பேருக்கு இ-சைக்கிள் வழங்கியவா் என்று அவா் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தாா். மொத்தம் 5,555 இ-சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மகளிா் சுயஉதவிக் குழுவினா், அங்கன்வாடி ஊழியா்கள், ஆஷா திட்டப் பணியாளா்கள், கிராம நிா்வாக ஊழியா்கள், மாணவா்களுக்கு இத்திட்டத்தில் இ-சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘இந்த சூப்பா் சைக்கிள்கள் பொருளாதார சுதத்திரத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இதில் எந்தச் செலவும் இல்லாமல் பேட்டரியை சாா்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.1,500 வரை எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் தடுக்கப்படுகிறது. இத்திட்டம் இந்தியாவில் முதல்முறையாக நமது பகுதியில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றாா்.
சிவபுரம் பகுதியில் சுமாா் 3 கி.மீ.தொலைவுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையில் இ-சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.
தொடர்புடையது

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

திருமலையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா் அன்னதானம்

நவீன தொழில்நுட்பத்துடன் தேவஸ்தான கோயில்கள் மேம்பாடு: முதல்வா் சந்திரபாபு நாயுடு

2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள குடும்பத்துக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை: மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அறிவித்த ஆந்திர முதல்வா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


