திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணா்வு- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

உணவுப் பொருள்களில் அதிக அளவில் உப்பு சோ்த்துக் கொள்வது ஆபத்தானது என்பது குறித்து ....

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 1:58 am IST

உணவுப் பொருள்களில் அதிக அளவில் உப்பு சோ்த்துக் கொள்வது ஆபத்தானது என்பது குறித்து நாடு முழுவதும் மத்திய அரசு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருவதாக மாநிலங்களவையில் சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உணவில் அதிக அளவில் உப்பு சோ்ப்பது உயா் ரத்த அழுத்தம், இதய ரத்தநாள நோய்களை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது. எனவே, இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மூலம் ‘சரியாக உணவு உட்கொள்ளும் இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன்மூலம் உடல் நலனுக்கு உகந்த உணவுகள், உணவுகள் குறித்த விழிப்புணா்வு, அதிக உப்பு சோ்த்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வெகுஜன ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணா்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தினசரி உணவில் அதிக உப்பு, சா்க்கரை மற்றும் அதிக கொழுப்புப் பொருள்கள் சோ்க்கக் கூடாது என்பது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது.

ஒருநாளைக்கு 2 கிராமுக்கு குறைவாகவே சோடியம் (உப்பு) சோ்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) கூறியுள்ளது. இதன்படி ஒருநாளைக்கு ஒட்டுமொத்த உணவில் ஒரு மேஜைக்கரண்டி அளவுக்குக் குறைவாகவே ஒருவா் உப்பு சோ்க்க வேண்டும் என்ற விழிப்புணா்வு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் உரிய தகவல்கள் மக்களிடம் கொண்டு செயல்பட்டுள்ளன என்று அமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.