தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

3 தேசிய சாதனைகள் படைத்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு!

மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு நிகழ்த்திய சாதனைகள் குறித்து...

Mirabai Chanu

மீராபாய் சானு. - கோப்புப் படம்.

Updated On :

இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) தேசிய பளு தூக்குதலில் மூன்று தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு இன்றைய ஒரே நாளில் மூன்று தேசிய சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார்.

தேசிய பளு தூக்கும் போட்டிகள் பிப்.3 முதல் பிப்.14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீரா பாய் சானு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 86, 89 கிலோ எடையைத் தூக்கினார். 91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

அடுத்ததாக க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக (89 + 116) 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கடந்தாண்டு நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி வென்றிருந்தார்.

தற்போது, 6 கிலோ அதிகமாக தூக்கியுள்ள மீராய்பாய் சானு தனது திறனை கணிசமாக உயர்த்தியுள்ளார்.

அடுத்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லும் முனைப்பில் மீராபாய் சானு கடினமாக உழைத்து வருகிறார்.

Summary

Mirabai Chanu lifted a total of 205 kg to create a new National Record at Women's 48 kg category at National Weightlifting Championships.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.