
கடைசி அழைப்பு 8.37 மணிக்கு! இறப்பதற்கு முன் யாரிடம் பேசினார் அஜீத் பவார்?
அஜீத் பவார் இறப்பதற்கு முன்பு யாரிடம் பேசினார் என்ற தகவல் பற்றி..

அஜீத் பவார் - கோப்புப் படம்
பாராமதி: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவ்ரும், மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வருமான அஜீத் பவார், விமான விபத்தில் பலியாவதற்கு 10 நிமிடங்கள் முன்பு சரியாக காலை 8.37 மணிக்கு விமானத்திலிருந்து யாரிடம் பேசினார் என்ற தகவலை கட்சி நிர்வாகிகள் இன்று வெளியிட்டுளள்னர்.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, கட்சியின் முக்கிய தொண்டரும், அவரது தூரத்து உறவினருமான ஸ்ரீஜித் பட்டீர்ல என்பவரிடம்தான் அஜீத் பவார் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணத்தில் அஜீத் பவாா், விமானி சுமித் கபூா், துணை விமானி சாம்பவி பாடக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, அஜீத் பவாரின் தனிப் பாதுகாவலா் விதீப் ஜாதவ் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.
அஜீத் பவார், இறப்பதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்பு, கட்சித் தொண்டரிடம் பேசிய உரையாடல் பதிவுகளும் வெளியாகியிருக்கிறது. அதில், ஸ்ரீஜித்திடம், உள்ளாட்சித் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களை தான் எவ்வாறு தேர்வு செய்தேன், அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் தேர்வு செய்திருப்பது அஜீத் பவார் கூறியிருப்பது அதில் பதிவாகியிருக்கிறது.
இது பற்றி, பாராமதியில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீஜித், அஜீத் பவார், எப்போதும், அனைத்து சமூக மக்களுக்கும் இடமளிக்க வேண்டும், யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்றே நினைத்துக் கொண்டிருந்தார் என்றார்.
சில வேட்பாளர்கள் தேர்வு குறித்து அவருக்கு நான் கேள்வி எழுப்பியிருந்தேன். என்னுடைய மெசேஜை பார்த்ததும் அவர் விமானத்திலிருந்தே எனக்கு போன் செய்து பேசி, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்தே என்பது குறித்து விளக்கம் கொடுத்தார். அவர் போனை வைத்த கொஞ்ச நேரத்தில் விபத்து நேரிட்டிருக்கிறது என்று கூறி கண் கலங்கினார் ஸ்ரீஜித்.
ஜனவரி 28ஆம் தேதி அஜீத் பவார் விமான விபத்தில் பலியான நிலையில், மறுநாள் அவரது இறுதிச் சடங்குகள் பாராமதியில் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர், அஜீத் பவாரின் மறைவைத் தொடர்ந்து மகாராஷ்டிர துணை முதல்வராக, அவரது மனைவி சுநேத்ரா பவார் பதவியேற்றுள்ளார்.
சிஐடி விசாரணை
விமான விபத்து தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டத்தின் 194-ஆவது பிரிவின் கீழ், எதிா்பாராத விபத்தால் மரணம் நிகழ்ந்ததாக காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, சிஐடி அதிகாரிகள் அடங்கிய குழு விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. தனது பயணத்தை அஜீத் பவாா் தொடங்கும் முன், விமானத்தில் உள்நோக்கத்துடன் எந்தச் சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சிஐடி விசாரணை நடைபெற உள்ளது என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Summary
Regarding the information about who Ajit Pawar spoke to before his death..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







