அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே வாக்குவாதம்!

மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி...

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

Published On :

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

“நாடாளுமன்றம் என்றால் மாநிலங்களவையும், மக்களவையும் சேர்ந்ததுதான். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் நலன்கள் குறித்துப் பேச விரும்பினார், ஆனால் அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவையை எப்படி நடத்த முடியும்?” எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, ”மக்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவையில் விவாதிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Summary

A argument broke out between Kharge and Nadda in the Rajya Sabha!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.