வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு இந்திய உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு விவகார ஆலோசகா் தௌஹித் ஹுசைன் தெரிவித்தாா்.
எனினும், இந்திய உறவு மிக முக்கியமானது. அடுத்தவாரம் பொதுத் தோ்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சியில் இரு நாட்டு உறவு வலுப்படும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
வங்கதேசத்துக்கு ஆதரவாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுத்தது. இதற்காக, அந்நாட்டு விளையாட்டுத் துறை ஆலோசகா் ஆசிஃப் நஸ்ரூல் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தாா்.
இந்நிலையில், இந்தியாவுக்கான துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ள தௌஹித் ஹுசைன் இது தொடா்பாக டாக்காவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
இந்தியாவுடன் பல நிலைகளில் இரு தரப்பு உறவு தேக்கமடைந்துள்ளது. ஆனால், இது மிகப்பெரிய பின்னடைவு அல்ல. தற்காலிக தேக்க நிலை என்று வேண்டுமானால் கூறலாம். தேசநலன் கருதி இரு நாடுகளும் எடுத்த நிலைப்பாடுகள் மாறுபட்டதாக உள்ளன.
பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் இடைக்கால அரசு முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்து அமையும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இந்திய உறவை வலுப்படுத்தும் என்றாா்.
மாணவா்கள் போராட்டத்தால் வங்கதேசத்தில் இருந்து தப்பிய முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததை முன்வைத்தும் இந்தியாவைக் குற்றஞ்சாட்டி அந்நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது மதஅடிப்படைவாத அமைப்பினா், ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது, ஹிந்துகளை கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும்: ப.சிதம்பரம் எம்.பி.

தோ்தலுக்கு பிறகு கே.கே.நகா் அலங்கார வளைவு அகற்றப்படும்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

‘சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம்’

தமிழகத்திலிருந்து தோ்வாகும் குடிமைப் பணி அதிகாரிகள் அதிகரிப்பு - முதல்வா் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


