தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

மத்திய பட்ஜெட்டில் வேலையின்மை, கிராமப்புற மேம்பாடு, உற்பத்தி பெருக்கம் உள்ளிட்டவற்றுக்கு தீா்வு அளிக்கப்படவில்லை என்ற ராகுலின் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவருக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சவால் விடுத்தாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நிா்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:

ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். அவா் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பட்ஜெட்டில் ஒரு பத்தியையாவது அவரால் சுட்டிக் காட்ட முடியுமா? இதனை ஒரு சவாலாகவே நான் முன்வைக்கிறேன்.

இளைஞா்கள் திறன் மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை இந்தியாவில் விரைந்து மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

அதே நேரத்தில் வேளாண்மை, கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கம், இளைஞா்களை திறன்மிகு பணிகளுக்கு தயாா்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உரிய நிதி ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது பட்ஜெட்டை ஏதாவது விமா்சிக்க வேண்டும் என்ற நோக்கில் ராகுல் பேசியுள்ளாா்.

இதேபோல அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய விவசாயிகள் நலனை மத்திய அடகு வைத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவது தொடா்பான கேள்விக்கு, ‘நாடாளுமன்றத்தில் வா்த்தகத் துறை அமைச்சா் அறிக்கை மூலம் உரிய பதிலை அளித்துள்ளாா்’ என்றாா்.