நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீறியதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

News image

பிரசாந்த் கிஷோர் - கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 4:50 pm IST

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீறியதாக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மேல்முறையீடு செய்துள்ளார்.

பிகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், பெண்களுக்கான நிதியுதவியை மாநில அரசு அறிவித்ததாகவும், அரசியலமைப்பு விதியை பிகார் அரசு மீறி விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், பெண்களுக்கு முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனாவின்கீழ் தலா ரூ. 10,000 வழங்கியதன் மூலம் அரசு, சட்டத்தை மீறியதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்

அரசியலமைப்பின் 324-வது பிரிவு (தேர்தல்களை நடத்துவதற்கான கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மேல் முறையீடு செய்துள்ளார்.

மேலும், இந்த வழக்கானது வெள்ளிக்கிழமையில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

பிகாரில் 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியினர் பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். ஆனால், 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது.

Summary

Jan Suraaj Party moves Supreme Court alleging cash inducements in Bihar polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.