பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது.
பிகாரில், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.
இந்தத் தேர்தலில், இண்டி கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றுள்ள நிலையில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சி முதல்முறை போட்டியிட்டதைத் தொடர்ந்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், பிகாரில் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமரின் மஹினா ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கி பிகார் அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டி ஜன்சுராஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜெய்மால்யா பாக்சி முன்னிலையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 6) அன்று விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Prashant Kishor's Jan Suraj party has filed a case in the Supreme Court against the Bihar Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகார் இடைத்தேர்தல்! மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்ததால் பிரசாந்த் கிஷோருக்குப் பின்னடைவு!

மகாராஷ்டிர அரசின் செயல்பாடுகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவோம்: பிணை வழக்கை எதிா்த்ததால் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

பிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டி








