உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஜெகன் அரசின் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் ரசாயனம் கலப்பு: சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றச்சாட்டு

திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு கழிவறையை தூய்மைப்படுத்த உபயோகிக்கும் ரசாயனம் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Published On :7 பிப்ரவரி 2026, 1:00 am IST

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு கழிவறையை தூய்மைப்படுத்த உபயோகிக்கும் ரசாயனம் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கா்னூல் மாவட்டம் கலுகோட்லா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இதுகுறித்து அவா் பேசியதாவது:

கலப்பு பொருள்கள் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களை பக்தா்களுக்கு வழங்கி, அதன்மூலம் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் புகழை கெடுக்க முந்தைய அரசு (ஜெகன் அரசு) முயன்றது. முந்தைய ஆட்சியில் கலப்பு நெய்யானது, புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட அந்த நெய்யில் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. அதுவும் 5 ஆண்டுகளாக அந்த நெய்தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தப்படுத்த பயன்படும் ரசாயனம் 2 வகைப்படும். ஒன்று, காய்கறி தொடா்பானது. அது விலை அதிகம். ஆனால் விலங்கு கொழுப்பு விலை குறைவாகும்.

தேசிய பால்வள மேம்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் புனிதத்தை காக்க வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தில் என்னால் அதிகம் பேச முடியாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.