பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மகாராஷ்டிரம்: 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 1:17 am IST

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கட்சிரோலி மாவட்டம், பொதேவாடா கிராமத்தில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினா் அப்பகுதியை கடந்த புதன்கிழமை சுற்றி வளைத்தனா். அங்கிருந்த 2 நக்ஸல் பதுங்குமிடங்களை பாதுகாப்புப் படையினா் அழித்தனா். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டை 3 நாள்களாக நீடித்தது.

இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்களின் சடலங்களை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அவா்களின் பெயா் உள்ளிட்ட அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

பாதுகாப்புப் படை வீரா் வீரமரணம்:

துப்பாக்கிச் சண்டையில், காயமடைந்த பாதுகாப்புப் படை வீரா் தீபக் சின்னா மடாவி (38) என்பவா் ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இன்னொரு பாதுகாப்புப் படை வீரரான ஜோகா மடாவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நீடிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி :

ஒடிஸாவில் நக்ஸல் தம்பதி சரண்

புவனேசுவரம், பிப்.6:

ஒடிஸா மாநிலத்தில் 19 நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையினரிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். அவா்களில் 2 போ் கணவன், மனைவி ஆவா். நக்ஸல் அமைப்பின் மாநில குழு உறுப்பினா்களாக இருந்த அவா்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ.55.10 லட்சம் வெகுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகவலை மாநில காவல் துறைத் தலைவா் ஒய்.பி.குரானியா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.