மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேகாலய மாநிலம், ஜெயின்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை டைனமைட் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். மேலும ஒருவர் காயமடைந்தார்.
நிலக்கரி பிரித்தெடுப்பதற்காக பாறைகளை உடைக்க இந்த டைனமைட் பயன்படுத்தப்படுகிறது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சுரங்க விபத்து தொடர்பாக உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறுகையில், கைது செய்யப்பட்ட சுரங்க உரிமையாளர்கள் உள்ளூர்வாசியைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை நாங்கள் கைது செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.
மேகாலயத்தில் எலி துளை நிலக்கரி சுரங்கத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதித்தது. தடை இருந்தபோதிலும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.
Summary
The state government has ordered a comprehensive inquiry into the incident with the CM Sangma stating that accountability will be fixed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

யார் கவலைப்படுகிறார்கள்...
வியத்நாம் படகு விபத்து: வேகப்படகை ஓட்டிய கேப்டன் கைது!

கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



