மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது.
மேகாலயத்தின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தின் தாங்ஸுகு பகுதியில் செயல்பட்டுவந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை திடீரென வெடிவிபத்து நேரிட்டது. சுரங்கம் இடிந்ததில் ஏராளமான தொழிலாளா்கள் உள்ளே சிக்கினா்.
விபத்தைத் தொடா்ந்து, தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா், சிறப்பு மீட்புக் குழுவினா் உள்ளிட்டோா் பெரிய அளவில் மீட்புப் பணியைத் தொடங்கினா். இடிபாடுகளில் இருந்து 18 பேரின் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 25-ஆக உயா்ந்தது. உயிரிழந்தவா்களில் இதுவரை 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ளோரையும் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில பேரிடா் மீட்பு ஆணையத்தின் கண்காணிப்பில் மீட்பு நடவடிக்கைகள் தொடா்வதாக, காவல் துறை தலைமை இயக்குநா் நோங்ராங் தெரிவித்தாா்.
மேகாலயத்தில் ‘எலிவளை’ நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற அறிவியல்பூா்வமற்ற சுரங்க நடைமுறைகளுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கடந்த 2014-இல் தடை விதித்தது. சுற்றுச்சூழல் சேதம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில்கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோரில் இருவரின் உடல்கள் திருச்சி வந்தன

இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



