உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ரயிலில் ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி கட்டணம் மட்டுமே..! நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

ரயில்வே துறை குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரை பற்றி...

கோப்புப்படம்

Published On :6 பிப்ரவரி 2026, 2:39 pm IST

ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி அடிப்படையில் பகுதியளவு படுக்கை மட்டுமே ஒதுக்கப்படும் பட்சத்தில், பாதி தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ரயில்வே துறை சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை புதன்கிழமை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், “ரயில்களின் பயணச்சீட்டு முன்பதிவு விவரங்கள் தயாரிக்கப்பட்ட பிறகும், முழுப் படுக்கை ஒதுக்கப்படாமல் பகுதியளவு மட்டும் ஒதுக்கப்படும் ஆர்ஏசி (Reservation against Cancellation - ரத்து செய்யப்படுவதற்கு எதிரான முன்பதிவு) பயணிகளுக்கு முழுத் தொகையை வசூலிப்பது நியாயமற்றது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி தொகையைத் திருப்பி செலுத்தும் விதிமுறைகளை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய நடைமுறையின் படி, ஆர்ஏசி பிரிவின் கீழ் பயணச்சீட்டை முழு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் பயணி, இறுதி பயணச்சீட்டு விவரங்கள் தயாரிக்கப்பட்டும் ஆர்ஏசி பிரிவில் இருந்தால், மற்றொரு ஆர்ஏசி பயணியுடன் ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்வார். ஒரு படுக்கைக்கு இரண்டு பயணிகளிடமும் முழுத் தொகை வசூலிக்கும் நடைமுறை உள்ளது.

இத்தகைய பயணிகளுக்கு பகுதி கட்டணத்தைத் திரும்பச் செலுத்துமாறும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்குமாறும் அக்குழு ரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அகலப் பாதையில் அதிவேக ரயில்களுக்கான குறைந்தபட்ச வேகமான மணிக்கு 55 கி.மீ. என்ற அளவுகோல்களை மறுஆய்வு செய்யவும் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Summary

Only half the fare for RAC passengers on trains! Parliamentary committee recommendation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.