மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

தொடரும் அமளி! மக்களவை பிப். 9 வரை ஒத்திவைப்பு!

மக்களவை பிப். 9 காலை வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

மக்களவை - Photo: SANSAD

Updated On :6 பிப்ரவரி 2026, 12:34 pm IST

மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிப்ரவரி 9 காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை பதிலுரை அளிக்கவிருந்தார். ஆனால், அமளி காரணமாக பிரதமரின் பேச்சு ரத்து செய்யப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றும் மக்களவையை எதிர்க்கட்சியினர் முடக்கிய நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்கும் வரை அமளி தொடரும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை மக்களவை கூடியவுடன் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை தொடர்ந்த நிலையில், முதலில் பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் பிப். 9 காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியினரின் அமளியை கண்டித்து பேசிய அவைத் தலைவர் ஓம் பிர்லா, “பட்ஜெட் தொடரின் 19 மணிநேரம் 13 நிமிடங்கள் அமளியால் வீணாகியுள்ளது. மக்கள் தங்களின் பிரச்னையைப் பேசுவதற்காகவே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கங்களை எழுப்புவதற்கு அல்ல. அவையை சுமுகமாக நடைபெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Summary

The Chaos continues! Lok Sabha adjourned until February 9th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.