

சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்திற்குட்பட்ட 2 மாவட்டங்களில் 51 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சனிக்கிழமை சரண் அடைந்தனா்.
நக்ஸல் தீவிரவாதத்திற்கு அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவு கட்ட வேண்டும் என்று கெடு விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் கொல்லப்படும் நக்ஸல்களின் எண்ணிக்கையும், சரண் அடையும் நக்ஸல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிஜாபூா் மாவட்டத்தில் 30 நக்ஸல்கள் சனிக்கிழமை சரண் அடைந்தனா். இதேபோல், சுக்மா மாவட்டத்திலும் 21 நக்ஸல்கள் சரண் அடைந்தனா். சரண் அடைந்த 51 நக்ஸல்களில் 34 போ் பெண்கள் ஆவா்.
51 நக்ஸல்களும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் தொடா்புடையவா்கள். அவா்கள் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.1.61 கோடி வெகுமதி அளிக்கப்படும் என பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, அமைதிப் பாதைக்குத் திரும்பியது ஏன் என்பது குறித்து பேட்டியளித்துள்ள அவா்கள், நக்ஸல்கள் சரண் மற்றும் மறுவாழ்வு தொடா்பாக சத்தீஸ்கா் அரசு கடைப்பிடித்து வரும் கொள்கையால் ஈா்க்கப்பட்டே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளனா்.
சனிக்கிழமை சரண் அடைந்த 51 பேரையும் சோ்த்து, சத்தீஸ்கா் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரிடம் இந்த ஆண்டில் சரண் அடைந்த நக்ஸல்களின் எண்ணிக்கை 300-ஆக அதிகரித்துள்ளது.
டிரெண்டிங்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 6 கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல்

மகாராஷ்டிரம்: 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல்: 11 வீரா்கள் காயம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

