திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

ஹைதராபாத்தில் தடய அறிவியல் ஆய்வகத்தில் தீ விபத்து

ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா தடய அறிவியல் ஆய்வகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image

தீவிபத்து ஏற்பட்ட தடய அறிவியல் ஆய்வகம். - Photo grab ANI Video.

Updated On :7 பிப்ரவரி 2026, 11:30 am

ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா தடய அறிவியல் ஆய்வகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், "காலை 10.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 10.22 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. கட்டடத்தின் முதல் தளத்திலிருந்து புகை வெளியேறியது. இரண்டு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.

தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு தீயணைப்பு ரோபோ பயன்படுத்தப்பட்டன.

முதல் தளத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே தீ விபத்து ஏற்பட்டதாகவும், சில கணினி அமைப்புகள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், சரியான காரணம் விசாரணையில் உள்ளது என்று அதிகாரி மேலும் கூறினார்.

Summary

 A fire broke out at the Telangana Forensic Science Laboratory (FSL) here on Saturday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.