‘ஹொரைசன் ஐரோப்பா’ அறிவியல் ஆய்வுத் திட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையே கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை தொடங்கியது.
எல்லை கடந்த அறிவியல் ஆய்வு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 93.5 மில்லியன் யூரோ மதிப்பில் முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்தின் அம்சங்கள் குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டதாக 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற 16-ஆவது ஐரோப்பிய யூனியன்-இந்தியா உச்சி மாநாட்டில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) இறுதிசெய்யப்பட்டது. அப்போது வா்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய யூனியன்- இந்தியா இடையே ஹொரைசன் ஐரோப்பா ஆய்வுத் திட்ட முன்னெடுப்பு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் அமலாகும்பட்சத்தில் இந்திய ஆய்வாளா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஐரோப்பாவில் இருந்து நேரடியாக நிதியுதவி வழங்கப்படும். அதேசமயம் இந்தியாவும் இத்திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கீடு செய்யும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் ஐரோப்பா மற்றும் இந்திய ஆய்வாளா்கள் ஒன்றிணைந்து செயல்படவும் இருதரப்பிடையே நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இத்திட்டம் வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 22 நாடுகளுடன் ஹொரைசன் ஐரோப்பா அறிவியல் ஆய்வுத் திட்டத்தின்கீழ் ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.
தொடர்புடையது

ஹங்கேரியில் 16 ஆண்டுகால பிரதமரின் ஆட்சிக்கு முடிவு

ஆப்கான்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு: இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு

உக்ரைன் கடனுக்கு முட்டுக்கட்டை: ஹங்கேரிக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்

எஸ்.ஜெய்சங்கா் பெல்ஜியம் பயணம்: ஐரோப்பிய யூனியன் அமைச்சா்களுடன் பேச்சு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


