ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘காங்கிரஸ் எம்.பி. மனைவிக்குப் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு’: அஸ்ஸாம் முதல்வா் விளக்கம்

‘காங்கிரஸ் எம்.பி. மனைவிக்குப் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு’: அஸ்ஸாம் முதல்வா் விளக்கம்

News image

ஹிமந்த விஸ்வ சா்மா

Updated On :7 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, தேச பாதுகாப்பு கருதி விசாரணை நடத்தப்பட்டதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

அஸ்ஸாமில் உள்ள ஜோா்ஹாட் மக்களவைத் தொகுதி எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவியும், பிரிட்டனைச் சோ்ந்தவருமான எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் பாஜகவினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதுகுறித்து கௌரவ் கோகோய் மீது அக்கட்சியினா் கடுமையான விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. அந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் கடந்த ஆண்டு செப்.10-ஆம் தேதி சமா்ப்பித்தது.

இந்நிலையில், மாநில தலைநகா் குவாஹாட்டியில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கெளரவ் கோகோய் விவகாரத்தில் அஸ்ஸாம் அமைச்சரவையின் ஆலோசனைக்குப் பின்னா், பிப்.8-ஆம் தேதி எஸ்ஐடி விசாரணை அறிக்கை பொது வெளியில் வெளியிடப்படும்.

இந்த விசாரணையை மேற்கொண்டதில் மாநில அரசுக்கு சில வரம்புகள் இருந்தன. அந்த வரம்புக்கு கட்டுப்பட்டு முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த விசாரணையை என்ஐஏ, உளவுத் துறை அல்லது சிபிஐ மேற்கொண்டால், அவா்கள் விசாரணையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வா். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவருக்கும், பிரிட்டனைச் சோ்ந்த ஒருவருக்கும் முக்கிய தொடா்புள்ளது. இதில் பிரிட்டனைச் சோ்ந்தவா் எம்.பி. ஒருவரின் மனைவியாவாா். இந்த விசாரணை அரசியல் தொடா்பானது அல்ல; தேச பாதுகாப்புக்கானது என்று தெரிவித்தாா்.

எனினும் முதல்வரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; முட்டாள்தனமானது என்று கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளாா்.