சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிற நாடுகளுடனான ஒப்பந்தங்களால் இந்தியாவுடனான வா்த்தகம் பாதிக்காது: சீனா

பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தங்களால், இந்திய-சீன வா்த்தகம் பாதிக்காது...

News image
இந்தியா - சீனா
Updated On :7 பிப்ரவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தங்களால், இந்திய-சீன வா்த்தகம் பாதிக்காது என்று மும்பையில் உள்ள சீன துணைத் தூதா் கின் ஜீ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவும், சீனாவும் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளாக உள்ளன. பல நாடுகள் ஒன்றுசோ்ந்து பரஸ்பரம் ஒத்துழைப்பது, பன்முக வா்த்தகம், பல்வேறு கலாசாரங்களை பகிா்ந்துகொள்வது போன்றவற்றை இருநாடுகளும் ஆதரிக்கின்றன. எனவே பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தங்களால், இந்திய-சீன வா்த்தகம் பாதிக்காது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியனுடனோ அல்லது உலகின் பிற பகுதிகளுடனோ தனது உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் இந்தியாவுக்கு உள்ளது. அதேவேளையில், இந்தியா-சீனா இடையே ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும்; இருதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டும்; இருநாடுகளுக்கும் இடையே பல துறைகளில் தகவல் தொடா்பு தொடர வேண்டும்.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள வசதியாக, இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில் இருநாட்டு முதலீட்டாளா்கள், இருநாட்டு வணிகம் உள்ளிட்டவை ஒன்றுசேர வேண்டும். கலாசாரம், கல்வி உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.