ராஜஸ்தானில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ரயில் (கோப்புப்படம்)
ANI

ரயில் (கோப்புப்படம்)
ANI
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தில்லியில் இருந்து ஜெய்சால்மருக்கு சென்றுகொண்டிருந்த ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் அடியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.
ரயில் நின்றவுடன், ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கத் தொடங்கினர். தீயணைப்பு கருவிகள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு ஊழியர்கள் சிறிது நேரத்திற்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். தீ அணைக்கப்பட்ட பிறகு, ரயில் மீண்டும் ஜெய்சால்மருக்குச் சென்றது என்று அதிகாரி மேலும் கூறினார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக ரயிலில் இருந்த பயணிகள் சிறிது நேரம் பீதியடைந்தனர். லோகோ பைலட்டின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...