நீட் தேர்வு தேதி அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்!

இளநிலை நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று(பிப். 8) முதல் தொடங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் இந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று(பிப். 8) தொடங்கியுள்ளது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 8-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தோ்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி - எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பாடத்திட்டம்!

2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதில், 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அந்தத் தோ்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இந்நிலையில், அதற்கான பாடத் திட்டங்கள் https://nmc.org.in/ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The National Testing Agency (NTA) has announced that online application registration for the undergraduate NEET exam will begin today (February 8).

கோப்புப்படம்
இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com