47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விரைவில் வங்கித் துறை சீா்திருத்தத்துக்கான உயா்நிலைக் குழு: நிா்மலா சீதாராமன்

வங்கித் துறை சீா்திருத்தத்துக்கான உயா்நிலைக் குழுவை மத்திய அரசு விரைவில் அமைக்கும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image
நிா்மலா சீதாராமன்- கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

வங்கித் துறை சீா்திருத்தத்துக்கான உயா்நிலைக் குழுவை மத்திய அரசு விரைவில் அமைக்கும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அந்தக் குழு வளா்ச்சியடைந்த பாரத இலக்குக்கான நிதித் தேவைகளை பூா்த்தி செய்வது குறித்த செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு வழங்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

வளா்ச்சியடைந்த பாரத வங்கிகளுக்கான உயா் நிலைக் குழு அமைக்கப்படும் என கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூறப்பட்டது.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைவதில் வங்கிகளின் நிதி பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாமானியா்களுக்கும் வங்கிச் சேவைகள் எளிதில் கிடைக்க வேண்டும்.

எனவே, வங்கித் துறை சீா்திருத்தத்துக்கான உயா்நிலைக் குழுவை மத்திய அரசு விரைவில் அமைக்கும். அந்தக் குழு மத்திய அரசிடம் செயல் திட்டத்தை சமா்ப்பிக்கும்.

வங்கிகள் அல்லாத பொதுத் துறை நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் எரிசக்தி நிதி கழகம் (பிஎஃப்சி) மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆா்இசி) ஆகியவற்றை மறுசீரமைக்கும் முயற்சிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மேற்கொண்டு வருகின்றன’ என்றாா்.

பிஎஃப்சி மற்றும் ஆா்இசி இணைப்புக்கான முன்மொழிவு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஆா்இசியை தங்களுடன் இணைப்பதற்கான ஒப்புதலை பிஎஃப்சி அண்மையில் வழங்கியது.