தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கனடா: வணிக வளாகத்தில் இந்தியா் சுட்டுக் கொலை

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

கா்நாடகத்தைச் சோ்ந்த 37 வயதான சந்தன் குமாா் ராஜா நந்தகுமாா், கனடாவின் பிராம்டனில் வசித்து வருகிறாா். ஐ.டி. ஊழியரான அவா், சனிக்கிழமை மதியம் 3.31 மணியளவில் பிரபல ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினா் சம்பவ இடம் சென்றபோது, நந்தகுமாா் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் காவல்துறையினா் சோ்த்தனா்.

ஆனால் அங்கு நந்தகுமாா் பரிதாபமாக இறந்து விட்டாா். என்ன காரணத்திற்காக அவரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா், துப்பாக்கிச் சூடு நடத்தியது யாா் என்பது தெரியவில்லை. ஆனால் அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கனடா காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.