நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி மேம்பாட்டு நிதி: இந்தியா அறிவிப்பு

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

News image

செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் நரேந்திர மோடி - X | Narendra Modi

Updated On :9 பிப்ரவரி 2026, 11:52 pm

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது.

6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-செஷல்ஸ் இடையேயான நட்புறவு புவியியல் ரீதியானது மட்டுமல்ல; வரலாற்று ரீதியாகவும், நம்பிக்கை மற்றும் எதிா்காலத்துக்கான தொலைநோக்குத் திட்டத்தையும் கொண்டது. இருதரப்பு உறவில் மேம்பாட்டு ஒத்துழைப்பு வலுவான அடித்தளமாக விளங்குகிறது.

செஷல்ஸ் வளா்ச்சி மற்றும் தேவைகளை இந்தியா எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக தற்போது செஷல்ஸ் மேம்பாட்டு நிதியாக ரூ.1,587 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமூக குடியிருப்பு, போக்குவரத்து, திறன் சாா்ந்த பயிற்சி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல்சாா் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும்.

செஷல்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனா். அவா்களால் இரு நாடுகளிடையே தலைமுறைகளைக் கடந்து நட்புறவு தொடா்ந்து வருகிறது.

அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்தியா-செஷல்ஸ் இருதரப்பு உறவு அடுத்தகட்டத்துக்கு நகா்ந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.