அழிவில் ஜனநாயகம்! ஆட்சியில் இருக்கும் சக்திகளே காரணம்! -எழுத்தாளர் சாரா ஜோசப்

முற்றிலும் அழிவை நோக்கி ஜனநாயகம் என்பதையே இப்போதைய நிலவரம் பிரதிபலிக்கிறது - எழுத்தாளர் சாரா ஜோசப்
Center-Center-Kochi
எழுத்தாளர் சாரா ஜோசப்
Updated on
1 min read

திருச்சூர் : ஜனநாயகம் முற்றிலும் அழிவை நோக்கிச் செல்வதையே இப்போதைய நிலவரம் பிரதிபலிக்கிறது; ஆட்சியில் இருக்கும் சக்திகளே இதற்கான காரணம் என்று எழுத்தாளர் சாரா ஜோசப் தெரிவித்தார்.

கேந்திர சாகித்திய அகாதெமி விருதை வென்ற கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் திருச்சூரில் இன்று(பிப். 9) செய்தியாளர்களுடன் பேசியதாவது : “கேரளத்திலும் இந்தியாவிலும் உள்ள இப்போதைய நிலவரம், ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்படுவதையே பிரதிபலிக்கிறது. கேரளத்திலும் மத்தியிலும் தொடர்ச்சியாக ஆளும் சக்திகளே இதற்கு பொறுப்பு என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்” என்றார்.

ஜனநாயகத்தின் பாதுகாவலராக கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) திகழும் என்பதை நிராகரித்துப் பேசிய அவர், “ஆளும் அனைத்து சக்திகளுக்கும் வகுப்புவாத, மதவாத சக்திகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அவர்களுடன் தோழமை வைத்துக்கொண்டு, ஆளும் வர்க்கத்தினர் இந்தியாவின் ஜனநாயகத்தையும் மத்தச்சார்பற்ற இந்தியாவையும் அழிக்கின்றனர். அரசு மாற்றம் நிச்சயம் தேவை” என்றார்.

Summary

Writer Sarah Joseph on Monday said there should be a change of government in Kerala Joseph said the present situation in the state and the country reflects a complete destruction of democracy.

"We can say for sure that forces which have been continuously ruling both in Kerala and at the Centre are responsible for this," she said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com