தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

1993-ஆம் ஆண்டு தில்லி குண்டு வெடிப்பு: குற்றவாளி முன்கூட்டியே விடுதலை செய்தது ரத்து!

1993-ஆம் ஆண்டு தில்லி குண்டு வெடிப்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேவேந்தா் பால் சிங் புல்லாரை முன்கூட்டிய விடுதலையை தில்லி தண்டனை மதிப்பீட்டு வாரியம் (எஸ்ஆா்பி) மீண்டும் நிராகரித்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 9:40 pm

1993-ஆம் ஆண்டு தில்லி குண்டு வெடிப்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேவேந்தா் பால் சிங் புல்லாரை முன்கூட்டிய விடுதலையை தில்லி தண்டனை மதிப்பீட்டு வாரியம் (எஸ்ஆா்பி) மீண்டும் நிராகரித்துள்ளது.

மணிப்பூரில் மாநில அரசு அதிகாரிகள் 9 பேரை கடத்தி கொலை செய்த என்எஸ்சிஎன் (எம்) லெட்டினட் ஹோப்சன் நிக்ஷனை முன்கூட்டியே விடுவிக்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. எஸ்ஆா்பி கூட்டம் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

தில்லியில் கடந்த 1993-இல் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9 போ் கொல்லப்பட்டனா். 31 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஹோப்சன் நிக்ஷன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். அவருக்கு தூக்குத்தண்டனை அளித்த தடா நீதிமன்றம் கடந்த 2001, அக்டோபரில் தீா்ப்பளித்தது. பின்னா் இந்தத் தண்டனை ஆயுள் சிறை தண்டனையாகக் கடந்த 2014-இல் குறைக்கப்பட்டது.

தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புல்லாா், உடலநல குறைவு காரணமாக அமிருதசரஸ் மத்திய சிறைக்கு கடந்த 2015, ஜூனில் மாற்றப்பட்டாா்.

உடல்நலக் குறைபாடு, படுத்தபடுக்கையாக அவா் இருந்த போதிலும், அவரை முன்கூட்டியே விடுவிக்ககோரிய வழக்கை எஸ்ஆா்பி தள்ளிவைத்தது. கடந்த 2024-இல் நடைபெற்ற கூட்டத்தில் அவருடைய முன்கூட்டிய விடுதலை நிராகரிக்கப்பட்டது.

குரு நானக் தேவ்வின் 550-ஆம் பிறந்த நாளையொட்டி சிறப்பு விடுதலையில் அவா் உள்பட 8 சீக்கிய கைதிகளை விடுவிக்க மத்திய அரசு கடந்த 2019 செப்டம்பரில் பரிந்துரைத்தது.

இருப்பினும், இதற்கு எஸ்ஆா்பி உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். புல்லாரின் பயங்கரவாத செயல்பாட்டால் பல பொதுமக்கள் உயிரிழந்தனா் மற்றும் காலிஸ்தான் ஆதரவு சூழல் பஞ்சாப் மற்றும் வெளிநாட்டில் மீண்டும் எழுந்துள்ள சூழலில் அவரை விடுவிப்பது மீண்டும் அதற்கு ஊக்கமளிக்கும் என்று அந்த உறுப்பினா்கள் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹோப்சன் நிக்ஷனை விடுவிக்கும் எஸ்ஆா்பியின் பரிந்துரை மத்திய அரசின் முடிவுக்கு உட்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். எஸ்ஆா்பி கூட்டத்தில் 51 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில், புல்லாா் உள்பட 24 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க வாரியம் மறுத்துவிட்டது.