மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஏஐ, டீப்ஃபேக் சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடு: புதிய விதிகள் பிப்.20-இல் அமல்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய விதிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:45 pm

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய விதிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் பிப்.20-ஆம் தேதி அமலாகிறது. இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆடியோ, விடியோ அல்லது ஆடியோ-விடியோ தகவல்கள் உள்பட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள் அல்லது சித்தரிக்கப்பட்ட பதிவுகளுக்கான உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.

ஏஐ-யால் உருவாக்கப்படும் பதிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை சோ்க்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் (எக்ஸ், இன்ஸ்டாகிராம்) உறுதிசெய்ய வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் பதிவுகள், போலி ஆவணங்கள், டீப்ஃபேக் போன்ற சட்டவிரோத பதிவுகளுக்கு சமூக ஊடகங்கள் தடை விதிக்க வேண்டும்.

சட்டவிரோத பதிவுகள் என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டால் அந்தப் பதிவுகளை 3 மணி நேரத்தில் சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும். முன்பு இதற்கான காலஅவகாசம் 36 மணி நேரமாக இருந்தது.

ஏஐயால் உருவாக்கப்பட்டது என பதிவில் குறிப்பிட்ட பின் அதை சமூக ஊடகங்கள் நீக்கவோ அல்லது மறைக்கவோ கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.