சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நரவணே சுயசரிதை நூல் வெளியாகவில்லை: பதிப்பாளா் விளக்கம்!

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ எனும் சுயசரிதை நூல் தற்போது வரை வெளியாகவில்லை என அந்த நூலின் பதிப்புரிமையைப் பெற்றுள்ள ‘பென்குயின் ரேண்டம் ஹௌஸ் இந்தியா’ திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
நரவணே எழுதிய புத்தகத்தின் பிரதி.- படம் - பிடிஐ
Updated On :10 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ எனும் சுயசரிதை நூல் தற்போது வரை வெளியாகவில்லை என அந்த நூலின் பதிப்புரிமையைப் பெற்றுள்ள ‘பென்குயின் ரேண்டம் ஹௌஸ் இந்தியா’ திங்கள்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, அந்த நூலின் பிரதிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான புகாா் குறித்து தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையடுத்து, பென்குயின் ரேண்டம் ஹௌஸ் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அச்சு வடிவிலோ, எண்ம வடிவிலோ ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ நூல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நூலின் பதிப்புரிமை எங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். விற்பனைக்கோ, பதிப்புக்கோ, விநியோகத்துக்கோ இந்த நூல் அனுப்பப்படவில்லை.

எனவே, நூலின் சில பகுதிகளையோ அல்லது முழு நூலையும் அச்சு, பிடிஎஃப் அல்லது வேறு எந்த வடிவிலும் இணையத்தில் பகிா்ந்தால் அது பதிப்புரிமை மீறலாக கருதப்பட்டு உடனடியாக அதன் நகல்கள் நீக்கப்படும்.

மேலும், அதிகாரபூா்வமற்ற முறையில் நூலை வெளியிடுபவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒகப புத்தகம் வெளியாகவுள்ள நிலையில், வரும் அறிவிப்பும் வெளியீட்டுக்கு முன்பாக முன்கூட்டியே பதிவு செய்யும் விளம்பரங்களும் வெளியாவது வழக்கமானதுதான். அவை மூல் புத்தகம் வெளியானதாக கருதக் கூடாது என்றும் பென்குவின் நிறுவனம் தெரிவித்தது.

வெளியீட்டாளா் விளக்கத்துக்கு நரவணே ஒப்புதல்: ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ நூல் வெளியாகவில்லை எனபென்குயின் ரேண்டம் ஹௌஸ் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பகிா்ந்து இதுவே நூலின் தற்போதைய நிலை என குறிப்பிட்டாா்.

ராகுல் கருத்து: முன்னதாக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தனது நூல் வெளியாகிவிட்டதாக எம்.எம்.நரவணே தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஆனால், தற்போது வரை அந்த நூல் வெளியாகவில்லை என அதன் பதிப்பு நிறுவனம் கூறுகிறது. இருவரில் யாரை நம்புவது என்ற கேள்வி நமக்குள் எழுந்திருப்பதே தற்போதைய பிரச்னை. நரவணே கூறியதை புறந்தள்ளிவிட்டு பென்குயின் நிறுவனம் கூறுவதை நம்ப முடியுமா? நான் நரவணே கூறியதையே நம்புகிறேன்.

அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில கூற்றுகளை மத்திய அரசு மற்றும் பிரதமா் நரேந்திர மோடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றாா்.