திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நரவணே புத்தகம் விற்பனைக்கு வரவில்லையா? நிலை என்ன? வெளியான விளக்கம்

நரவணே புத்தகம் விற்பனைக்கு வரவில்லையா என்பது குறித்து விளக்கம்

News image

நரவணே எழுதிய புத்தகத்தின் பிரதி (ராகுல் காந்தி கையில்) - படம் - பிடிஐ

Updated On :10 பிப்ரவரி 2026, 6:49 pm IST

முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகம் முறைப்படி விற்பனைக்கு வந்துவிட்டதா? இல்லையா என்பது குறித்து புத்தகத்தை அச்சிடும் பென்குயின் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதனை, இந்திய ராணுவ முன்னாள் தளபதி எம்.எம். நரவணே தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இணைத்து, முதல் முறையாக, புத்தகம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

பென்குயின் இந்தியா நிறுவனம், தன்னுடைய இரண்டாவது விளக்கத்தில், அறிவிக்கப்பட்ட தலைப்பு, முன்கூட்டிய புத்தக ஆர்டர் செய்வதற்கான பட்டியல் மற்றும் வெளியிடப்படும் புத்தகம் ஆகியவை தனித்தனி நிலைகள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆனால், சில்லறை விற்பனையில் புத்தகம் வாங்குவதற்குக் கிடைக்கும்போது மட்டுமே ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது, சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் ஒரு புத்தகம் விற்பனைக்கு வந்த பிறகே, அது வெளியிடப்பட்டதாக அர்த்தமாகும். அதன்படி, இந்திய ராணுவ முன்னாள் தளபதி எம்.எம். நரவணே ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற சுயசரிதை புத்தகம் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது பென்குயின் இந்தியா நிறுவனம்.

நரவணேயின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகளை மேற்கோள்காட்டி, 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லை விவகாரத்தில் சீனா உடனான மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக மக்களவையில், ராகுல் காந்தி விமர்சித்துப் பேசியிருந்த நிலையில், புத்தகம் பேசுபொருளானது.

இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேவையான அனுமதி இன்னும் தொடர்புடைய துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்படாத நிலையில், புத்தகத்தின் முதன்மை பிரதிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சில இ-வணிக நிறுவனங்களிலும் விற்பனைக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புத்தக வெளியீடு குறித்த கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில், இது குறித்து காவல்துறையும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமும் உள்ளடக்கமும் இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நரவணே வெளியிட்ட எக்ஸ் பதிவில், என்னுடைய புத்தகத்தை வாங்குவதற்கு இந்த இணைப்பைப் பின் தொடரலாம் என்று தெரிவித்திருந்தார்.

அப்போது, நரவணே பொய் சொல்கிறாரா இல்லை பென்குயின் நிறுவனம் பொய் சொல்கிறதா என்பதே என் கேள்வி என்றார்.

Summary

Explanation on why Naravane's book is not for sale

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.