பெங்களூரில் பள்ளிப் பேருந்து மோதியதில், 2 குழந்தைகள் பலியாகினர். சாலையைக் கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வடக்கு பெங்களூரின் தனிசந்த்ரா என்ற பகுதியில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனிசந்த்ரா என்ற பகுதியில் இன்று காலை நாகன கௌடா என்ற காவலர், தன்னுடைய இரண்டு வயது மகள் வர்ஷா மற்றும் தன்னுடைய சகோதரரின் 4 வயது மகள் பானுவையும் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்க மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த பள்ளிப் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், குழந்தைகள் இருவரும் சாலையில் விழ, அவர்கள் மீது பள்ளிப் பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் கௌடா காயமின்றி உயிர் தப்பினார். பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Summary
The tragic incident in Bengaluru where two children were killed in a school bus collision has left many people in mourning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு
பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



