டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

காஷ்மீரில் கண்ணிவெடிகுண்டு வெடித்து இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்...

(கோப்புப்படம்)

Published On :

ஜம்மு - காஷ்மீரில், இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகில் கண்ணிவெடி வெடித்து இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் குல்மார்க் பகுதியில், புதன்கிழமை (பிப். 11) அதிகாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் குறித்து முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்திய எல்லைக் கோடு அமைந்துள்ள பகுதியில், ஊடுருவல்களைத் தடுப்பதற்காக இந்தியப் படைகள் கண்ணிவெடிகளை பொருத்தியுள்ளதாகவும், அப்பகுதியில் மழை அல்லது வெள்ளம் ஏற்பட்டால் கண்ணிவெடிகள் சரிந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Summary

An Indian soldier has been seriously injured in a landmine explosion near the Line of Control in Jammu and Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.