பொய்யான குற்றச்சாட்டுகள்: ராகுல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!
மக்களவையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்

மக்களவையில் ராகுல் காந்தி - பிடிஐ
மக்களவையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரண் ரிஜிஜு பேசுகையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைமுறை மற்றும் செயல்பாட்டு நடத்தை குறித்து மிகவும் தெளிவான விதிகள் உள்ளன. ஓர் உறுப்பினருக்கு எதிராக மற்றோர் உறுப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்பினால், அறிவிப்பினை நீங்கள் வழங்க வேண்டும். மேலும், குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
ராகுல் காந்தி முன்வைத்த கருத்துகளை உறுதிப்படுத்த, அவரை அவைக்கு வரவழைக்குமாறு கோரியுள்ளேன்.
இந்தியா மற்றும் நாட்டின் நலன்களை பிரதமர் மோடி விற்றுவிட்டதாகக் கூறி, பிரதமருக்கு எதிராக தேவையற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்துள்ளார்.
எதன் அடிப்படையில் எந்த அறிவிப்பும் இல்லாமல், ஹர்தீப் சிங் பூரி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகையின்மை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதைக் குறிப்பிட்டுப் பேசிய கிரண் ரிஜிஜு, அவைக்கு ராகுல் தாமதமான வருகையை மேற்கோள் காட்டினார்.
Summary
Privilege notice against Rahul Gandhi for misleading the house, says Union Parliamentary Affairs Minister Kiren Rijiju
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







