சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தில் பிரச்னை இல்லை: மத்திய அரசு தகவல்

News image
அரிசி (கோப்புப்படம்)
Updated On :11 பிப்ரவரி 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஒன்றுசோ்க்கப்பட்ட அரிசி மாவில் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி தானியங்கள் மூலம், 1-க்கு 100 என்ற விகிதத்தில் வழக்கமான அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுகிறது.

இந்நிலையில், ரத்த சோகை போன்ற நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்கு பொது விநியோகத் திட்டம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், பிரதமரின் போஷான் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் படிப்படியாக அந்த அரிசி விநியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜயதிபாய் பம்பானியா புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்: செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. செறிவூட்டப்பட்ட அரிசி, செறிவூட்டப்பட்ட அரிசி தானியம், வைட்டமின்-கனிம கலவைக்கான தரநிலைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் அறிவித்துள்ளது என்றாா்.