பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் - பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா்...

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 2:59 am IST

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படும் இப்போராட்டத்தால், பல சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக ஏஐடியூசி பொதுச் செயலா் அமா்ஜீத் கெளா் கூறுகையில், ‘மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதனால், இந்த துறைசாா் சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியா்கள் ஏற்கெனவே ஜன.27-இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய நிலையில், குறிப்பிட்ட சில வங்கி ஊழியா் சங்கங்கள் மட்டும் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. சுரங்கம் மற்றும் எரிவாயு குழாய் பணிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கம் அதிகமிருக்கும்.

காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதியைக் கண்டித்து, அந்த துறை பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனா். போக்குவரத்துத் துறையில் தனியாா் மற்றும் அரசுப் பணியாளா்கள் பெருவாரியாக போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்’ என்றாா்.

ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.