ஜம்மு - காஷ்மீரில் 2024 முதல் 1400 சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு! - முதல்வர் ஒமர் அப்துல்லா தகவல்!

2024 அக்டோபர் முதல் ஜம்மு - காஷ்மீரில் 1400-க்கும் அதிகமான சட்டவிரோத கட்டமைப்புகள் இடிக்கப்பட்டது குறித்து...
ஜம்மு - காஷ்மீரில் 1400 அதிகமான சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு (கோப்புப் படம்)
ஜம்மு - காஷ்மீரில் 1400 அதிகமான சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு (கோப்புப் படம்)PTI
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில், 2024 அக்டோபர் முதல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகள் உள்ளிட்ட 1,400-க்கும் அதிகமான கட்டமைப்புகள் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த முதல்வர் ஒமர் அப்துல்லா, கடந்த 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் வீடுகள் உள்ளிட்ட 1,425 சட்டவிரோத கட்டமைப்புகள் இடித்து தகர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உரிய விசாரணைகளுக்குப் பின் வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாக, முதல்வர் ஒமர் அப்துல்லா உறுதியளித்துள்ளார்.

மேலும், ஜம்முவில் அமைந்திருந்த பத்திரிகையாளர் அர்ஃபாஸ் அஹமது டயிங் என்பவரின் வீடும் கடந்த நவம்பரில் இடித்து தகர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 1,194 குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் 231 வணிகக் கட்டடங்கள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டுள்ளன. இதில், அதிகப்படியாக ஸ்ரீநகரில் 119 வணிகக் கட்டமைப்புகள் உள்பட 1,133 கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு மாவட்டத்தில் 75 வணிகக் கட்டமைப்புகள் உள்பட 237 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு - காஷ்மீரில் 1400 அதிகமான சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு (கோப்புப் படம்)
ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா?
Summary

In Jammu and Kashmir, more than 1,400 structures, including illegally constructed houses, have been demolished since October 2024.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com