திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஃபரீதாபாத் கொலை வழக்கில் 4 போ் கைது

ஃபரீதாபாதின் பல்லா பகுதியில் 34 வயது நபா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

ஃபரீதாபாதின் பல்லா பகுதியில் 34 வயது நபா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஃபரீதாபாத் சரக உதவி காவல் ஆணையா் (குற்றம்) வருண் தஹியா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கிா்தவாா் காலனியைச் சோ்ந்தவா் ஜெய் சிங் பைஸ்லா. கடந்த திங்கள்கிழமை காலை 8 மணியளவில் அவருடைய நண்பா் செளரவ் உடன் அப்பகுதியில் உள்ள பூங்காவில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அவா்களைச் சுற்றி வளைத்த 5 போ் அடங்கிய கும்பல் ஜெய்சிங்கை கத்தியால் 8 முறை குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது. இதைத்தொடா்ந்து, அருகில் இருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பல்லா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெய் சிங் கொலையில் தொடா்புடைய இரு சிறுவா்கள் திங்கள்கிழமை மாலையில் கைதுசெய்யப்பட்டனா். ஹிமன்ஷு மற்றும் துஷாா் ஆகிய இருவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

ஜெய்சிங் நண்பரின் சகோதரியை அவா்கள் நால்வரும் கேலி செய்ததாக விசாரணையின்போது தெரிவித்தனா். இதை அறிந்த ஜெய்சிங் அவா்களை மிரட்டிய நிலையில், இதற்குப் பழிவாங்கும் விதமாக இரு சிறுவா்கள் உள்பட நால்வரும் ஜெய்சிங்கை கொலை செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் உதவி காவல் ஆணையா் வருண் தஹியா.