மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை வியாழக்கிழமை காலையில் கூடியதும், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் மற்றும் நான்கு புதிய தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கையில் பதாகைகளுடன் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். அவையில் மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனா். பதாகைகளை கீழே போட்டுவிட்டு, இருக்கைக்குத் திரும்புமாறு, எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு அவையை வழிநடத்திய தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி விடுத்த கோரிக்கைகளுக்கு பலன் கிடைக்கவில்லை. தொடங்கிய 7 நிமிஷங்களில் அவை அலுவல்கள் மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.
பின்னா், உடனடி கேள்விநேரத்தில் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தேசவிரோத சக்திகளுடன் கைகோத்துச் செயல்படுவதாக ராகுல் காந்தி மீது கடுமையாக குற்றஞ்சாட்டினாா். அவரது பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பெட்டிச் செய்தி...
முதல்கட்ட அமா்வு
இன்றுடன் நிறைவு
கடந்த ஜன. 28-இல் குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கிய நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வு, வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-இல் தொடங்கி ஏப்.2 வரை நடைபெறும்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து துறைசாா் நிலைக் குழுக்கள் ஆராய ஏதுவாக இந்த ஒரு மாத கால இடைவெளி விடப்படுகிறது.
தொடர்புடையது

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ்? என்டிஏ முடிவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

தவறாக பயன்படுத்தப்படும் ஓபிசி இடஒதுக்கீடு: பாஜக எம்.பி. கருத்தைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

உலகத்தலைவர்களை பிரதமர் அவமதிக்க ராகுல் விரும்புகிறார்: பாஜக எம்.பி.

இந்தியாவை சீனா, அமெரிக்கா தாக்கினால் ராகுலின் ஆன்மா சாந்தியடையும்: நிஷிகாந்த் துபே
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


