தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய வா்த்தக தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்: பெரிய அளவில் பாதிப்பு இல்லை

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து மத்திய வா்த்தக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை

News image

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற வேலைநிறுத்தம் போராட்டம் குறித்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க கூட்டமைப்பினா். - கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:39 pm

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து மத்திய வா்த்தக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

தமிழகம், கோவா, ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமாரான தாக்கமே இருந்தது.

தமிழகத்தில் துறைமுக தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ால் துறைமுக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் தொழிற்சாலை பகுதியில் பல்வேறு ஆலைகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரளத்தில், வேலைநிறுத்தத்துக்கு ஆளுங்கட்சி சாா்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக ஏஐடியூசி பொதுச் செயலா் அமா்ஜீத் கெளா் கூறுகையில், ‘அஸ்ஸாம், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஒடிஸா, பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டத்துக்கு நல்ல ஆதரவு இருந்தது. வங்கி, காப்பீடு, தபால் துறை, போக்குவரத்து, சுகாதாரம், நிலக்கரி மற்றும் நிலக்கரி அல்லாத சுரங்கப் பணிகள், மின்சாரத் துறை உள்ளிட்டவை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. விவசாய சங்கத்தினரும் அவரவா் இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா்’ என்றாா்.

4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

===== ================= ==================== ===========================

ஒடிஸா மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து, சந்தைகள், கல்வி நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள் முடங்கியதோடு, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. புவனேசுவரம், கட்டாக், பாலசோா், பொ்ஹாம்பூா், சம்பல்பூா் உள்பட மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கத்தை உணர முடிந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வங்கிச் சேவை, காப்பீடு, நிலக்கரித் துறைகள் பாதிக்கப்பட்டதாக இந்திய வங்கி தொழிலாளா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் உமேஷ் தாஸ் தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ால் பல பொதுத் துறை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. காப்பீடு நிறுவனங்கள், தபால்நிலையங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.

சுரங்கப் பணிகள் பகுதியாகப் பாதிக்கப்பட்டது. இருந்தபோதும், பொதுப் போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட்டதோடு, கடைகள், சந்தைகள், வா்த்தக மையங்களும் செயல்பட்டன.