ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ககன்யான் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் - குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

இத்திட்டத்தை 2027-ஆம் ஆண்டில் செயல்படுத்த திட்டம் வகுத்து, அதற்கேற்ப முன்னேற்பாடுகளை இஸ்ரோ செய்துவருகிறது.

News image
சுபான்ஷு ஷுக்லா - Center-Center-Delhi
Updated On :12 பிப்ரவரி 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் "ககன்யான்' திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா தெரிவித்தார்.

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் "ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. மூன்று பேர் அடங்கிய விண்வெளி வீரர்களின் குழுவை விண்ணுக்கு அனுப்பி, 3 நாள்கள் கழித்து, பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் இத்திட்டத்தை 2027-ஆம் ஆண்டில் செயல்படுத்த திட்டம் வகுத்து, அதற்கேற்ப முன்னேற்பாடுகளை இஸ்ரோ செய்துவருகிறது.

இந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய} அமெரிக்க விண்வெளி வர்த்தக அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்தபோது, "ககன்யான்' தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து, "ககன்யான்' திட்டத்தின் குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா கூறியதாவது:

"ககன்யான்' திட்டத்தைப்போல, விண்ணுக்கு மனிதனை அனுப்பியுள்ள உலக நாடுகள் மூன்றுதான். இத்திட்டம் மிகவும் சிக்கலானது மற்றும் சவால்கள் நிறைந்தது. எனினும், துணிச்சலாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது.

எத்தனைக் காலம் பிடித்தாலும், முதல்நாளில் இருந்த அதே உற்சாகத்துடன் "ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அந்த உற்சாகம், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் அந்த நாளிலும் இருக்கும்.

"ககன்யான்' போன்ற அதிநுட்பமான திட்டங்களில் சிக்கல்களும், சவால்களும் இயல்பானது என்பதை நான் அறிவேன். இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் அறிவேன். அதையெல்லாம் கடந்து, "ககன்யான்' திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சியில் பன்னாட்டு கூட்டிணைவுகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு நான் பங்கேற்ற "ஆக்ஸிம்' திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது, மற்ற எல்லா துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கும். இந்தியா} அமெரிக்கா கூட்டு முயற்சிகள், எதிர்கால கூட்டிணைவுகளுக்கான வாசல்களை திறந்துவிடுகின்றன. மேலும், பொது இலக்குகளை நோக்கி பல நாடுகள் கூட்டாக செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் இரு நாடுகளை ஒப்பிடுவது தவிர்க்கமுடியாதது. ஆனால், அதுபோன்ற ஒப்பீடுகளில் இருவேறு வகையான முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் பரிமாணங்களைக் கண்டுணர வேண்டும்.

காலத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பெருகிவரும் முதலீடுகளுக்கு இடையே, இந்தியாவின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.