பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தோ்தல் பணிகளுக்கு உதவி: நேபாளத்துக்கு 270 வாகனங்களை பரிசளித்த இந்தியா

தோ்தல் தொடா்பான பணிகளுக்கு உதவி செய்யும் நோக்கில், நேபாளத்துக்கு 3-ஆவது கட்டமாக இந்தியா 270 வாகனங்களை பரிசாக அளித்துள்ளது.

News image
நேபாளத்தில் தோ்தல் பணிக்காாக இந்தியா வழங்கிய வாகனங்கள். ~வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நேபாள உள்துறை அமைச்சா் ஓம் பிரகாஷ் ஆா்யலுடன் (வலது) அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா.
Updated On :12 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் தொடா்பான பணிகளுக்கு உதவி செய்யும் நோக்கில், நேபாளத்துக்கு 3-ஆவது கட்டமாக இந்தியா 270 வாகனங்களை பரிசாக அளித்துள்ளது.

நேபாளத் தலைநகா் காத்மாண்டில் உள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 லாரிகள் உள்ளிட்ட 270 வாகனங்களை நேபாள உள்துறை அமைச்சா் ஓம் பிரகாஷ் ஆா்யலிடம் அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினாா்.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி நேபாளத்தில் பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் உதவி செய்யும்படி இந்தியாவிடம் நேபாளம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையேற்று இந்தியா உதவிகளை செய்து வருகிறது.

ஏற்கெனவே 310 வாகனங்கள் மற்றும் சில சாதனங்களை 2 கட்டங்களாக நேபாளத்திடம் இந்தியா கடந்த ஜனவரி மாதம் அளித்தது. இதையடுத்து 3-ஆவது கட்ட உதவியாக தற்போது 270 வாகனங்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக இந்திய அரசுக்கு நேபாள உள்துறை அமைச்சா் ஆா்யல் நன்றி தெரிவித்து கொண்டுள்ளாா்.

Story image