தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

கான்பூர் சொகுசு கார் விபத்தில் தொழிலதிபர் மகன் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபரின் மகன் ஷிவம் மிஸ்ரா - Photo: x

Published On :

உத்தரப் பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதி 6 பேர் படுகாயமடைந்த விவகாரத்தில் காரை ஓட்டிச்சென்ற தொழிலதிபர் மகன் ஷிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள குவால்டோலி பகுதியில் பிரபல தொழிலதிபரான கே.கே. மிஸ்ராவின் மகன் அதிவேகமாக ஓட்டிய சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

புகையிலை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை பகல் 3.15 மணியளவில் லம்போர்கினி காரில் அதிவேகமாகச் சென்று விபத்து நேர்ந்துள்ளது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது முதலில் மோதி, பின்னர் சாலையோரம் இருந்த பாதசாரிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தவுடன் ஷிவம் மிஸ்ரா தப்ப முயற்சித்ததாகவும், காரின் கண்ணாடியை உடைத்த மக்கள் அவரை தாக்க முயற்சித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

காவல் துறையினர் பறிமுதல் செய்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் தொழிலதிபரின் மகன் ஷிவம் மிஸ்ரா காரை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

இதனிடையே, காரை ஓட்டியது ஷிவம் அல்ல, அவரது ஓட்டுநர் துரை என்றும், காவல் நிலையத்தில் அவர் சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், காவல்துறைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், விசாரணையை சரியாக மேற்கொள்ளதாக காவல் நிலைய அதிகாரி புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஷிவம் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று காலை அழைத்துச் சென்றனர்.

Summary

Kanpur Luxury car accident: Businessman's son arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.