தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நிா்மலா சீதாராமன் மக்களவை உரை: பிரதமா் மோடி பாராட்டு

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை ஆற்றிய உரைக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :12 பிப்ரவரி 2026, 8:14 pm

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை ஆற்றிய உரைக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எவ்வாறு சிறப்பாக பங்களிக்கும் என்பதை தனது உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெளிவாக விளக்கினாா். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, சீா்திருத்த எக்ஸ்பிரஸ், திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு, சுகாதாரத் துறை மேம்பாட்டு நடவடிக்கை, கல்வி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த அனைத்தையும் அவா் விளக்கிப் பேசினாா்’ என்று கூறியுள்ளாா்.

நிா்மலா சீதாராமன் தனது பதிலுரையில் அரசின் மொத்த மூலதனச் செலவு ரூ.17.1 லட்சம் கோடியாக உயா்ந்திருப்பதையும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் என்பதையும் சுட்டிக்காட்டினாா். நிதி ஒழுங்கமைப்பு, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது உள்ளிட்ட பொருளாதாரம் சாா்ந்த விஷயங்களையும் தாண்டி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த விமா்சனங்களுக்கும் நிதியமைச்சா் பதிலளித்தாா்.

அப்போது, ‘உலக வா்த்தக அமைப்பு போன்ற சா்வதேச அமைப்புகளிடம் நாட்டின் நலன்களை சரணடையச் செய்தது காங்கிரஸ்; இதுபோன்ற செயலில் பிரதமா் மோடி ஒருபோதும் ஈடுபடமாட்டாா்’ என்று அவா் குறிப்பிட்டாா்.