மேற்கு வங்கத்தில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செவிலியர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் இருவர் கடந்த ஜன. 6 அன்று முதல் நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடுமையான காய்ச்சல், தலைவலி, வலிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 25 மற்றும் 27 வயதுடைய செவிலியர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நிபா வைரஸின் பரவல் குறித்து மாநில சுகாதாரத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த இருவரில் ஆண் செவிலியர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகள் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு நிபா வைரஸ்-க்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மேற்கு வங்கத்தில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த செவிலியருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, இன்று (பிப். 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மேற்கு வங்கத்தில் நிபா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தது முதல்முறையாகப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், வேறு யாரிடமும் நிபா வைரஸின் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
A nurse who was being treated for Nipah virus in West Bengal has reportedly died.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










