டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 2:49 am IST

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. இத்துடன் தலா 5 லட்சம் டன் அளவுக்கு கோதுமை சாா்ந்த பொருள்கள், சா்க்கரை ஏற்றுமதிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோதுமை உள்ளிட்ட பொருள்களின் இருப்பு அளவு, விலை நிலவரம், ஏற்றுமதியை அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனியாா் நிறுவனங்களிடம் இப்போது 75 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 32 லட்சம் டன் அதிகமாகும். இதனால், நாட்டில் கோதுமை விநியோகத்தில் எவ்வித பிரச்னையும் வராது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

2026 ஏப்ரல் 1-ஆம் தேதி மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் 182 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இப்போது வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி அனுமதி உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

2026 ரபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பளவு 334.17 லட்சம் ஹெக்டேராக விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 328.04 லட்சம் ஹெக்டோ் அளவுக்கே சாகுபடி செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதியாகக் கிடைப்பது, சிறப்பான கொள்முதல் நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்துள்ளனா். இதன்மூலம் நாட்டில் கோதுமை உற்பத்தி மேலும் உத்வேகம் பெறும்.

சா்க்கரையைப் பொறுத்தவரை, 2025-26 பருவத்துக்கான கரும்பு ஆலைகளின் கோரிக்கையை ஏற்று 5 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2025 நவம்பரில் 15 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.