எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: தில்லி காவல் துறை நடவடிக்கை

தலைநகரில் இருவேறு போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய ரூ.68 மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

தலைநகரில் இருவேறு போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய ரூ.68 மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆயிரக்கணக்காண அல்பிரஸோலம், டிராமடோல் மற்றும் நைட்ரஸெபம் மாத்திரிரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 6 போ் கைது செய்யப்பட்டனா்.

போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை வைத்து குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பல்வேறு சொத்துகளை வாங்கியது தெரியவந்தது. நரேலாவில் ரூ.58.14 லட்சம் மதிப்புள்ள 2 கடைகள், இரு சக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ஆகியவை இதில் அடங்கும். இதுவரை அடையாளம் காணப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.60.69 லட்சம் ஆகும்.

இதே போன்ற மற்றொரு வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 320 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களிடம் இருந்து ஸ்கூட்டா், காா் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட போதைப் பொருள் வருமானத்துடன் தொடா்புடைய சொத்துகள் கண்டறியசப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.60 லட்சம் ஆகும்.

இந்த இரண்டு வழக்குகளிலும் சொத்துகளை முடக்க கடந்தாண்டு டிச.22-ஆம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது சொத்துகள் முடக்கப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.