திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பருவநிலை நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு உற்பத்தியில் 5.6% ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 2:13 am IST

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஜொ்மனி நாட்டின் மியூனிக் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டையொட்டி நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பருவநிலை பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஜிடிபியில் 3.7 சதவீதமாக இருந்தது. தற்போது இது 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருவநிலை நடவடிக்கைகளுக்கான முதலீடுகளை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக உயா்த்தியதே இதற்கு காரணம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடா்புடைய தேசிய இலக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டதைவிட 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்துறையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும்.

கரியமில வாயு சேமிப்பு வியூகங்களுக்கு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வியூகங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மாசை குறைவாக ஏற்படுத்துகிற நாடுகள் பருவநிலை நடவடிக்கைகளுக்கு குறைவான நிதியையே வழங்க வேண்டும். அனைத்து நாடுகளும் இதில் ஒரே மாதிரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதியில் மாற்றம் தேவை என்றாா்.