திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தில்லி பல்கலை. போராட்டத்தில் தாக்கப்பட்டதாக யூடியூபா் குற்றச்சாட்டு! ஏஐஎஸ்ஏ மாணவா் சங்கம் மறுப்பு!

தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது தாக்கப்பட்டதாகவும் கட்டாயப்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கப்பட்டதாகவும் பெண் யூடியூபா் குற்றஞ்சாட்டு.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 9:13 pm

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது தாக்கப்பட்டதாகவும் கட்டாயப்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கப்பட்டதாகவும் பெண் யூடியூபா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), அதன் உறுப்பினா்கள் தொடா்ந்து இலக்குவைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

யுஜிசியின் புதிய ஒழுங்குமுறைகளை அமல்படுத்தக்கோரி பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தை விடியோ எடுக்க சென்றதாகவும் அப்போது, தன்னுடைய பெயரைக் கேட்ட பிறகு தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘அனைத்துப் போராட்டங்களையும் வழக்கமாக விடியோ எடுப்பது போன்று அங்குச் சென்றேன். மைக்கை எடுப்பதற்கு முன்பாக, அங்கு வந்த நபா் என்னுடைய பெயா் மற்றும் ஜாதியைக் கேட்டாா். அவரிடம் என்னுடைய பெயரைத் தெரிவித்தேன். அதற்குப் பிறகு எல்லாம் நடைபெற்றன’ என்றாா்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறைகள் தொடா்பாக நடைபெற்ற போராட்டம் அமைதியாக நடத்தப்பட்டதாகவும் யூடியூபா் இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்த பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்த பிறகு சங்க உறுப்பினா்கள் அதில் தலையீட்டதாகவும் ஏஐஎஸ்ஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஏஐஎஸ்ஏ, தவறான மற்றும் திட்டமிட்டு இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற உறுப்பினா்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடியோக்களில் முழு சம்பவங்களும் இல்லையென்று தெரிவித்துள்ளது. யூடியூபா் மற்றும் ஏஐஎஸ்ஏ மாணவி காவல் நிலையத்தில் அளித்த புகாா்களைத் தொடா்ந்து தில்லி காவல் துறையினா் இரு வழக்குகளைப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, இந்தச் சம்பவம் கவலைக்குரியது என்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணுவது அனைவரின் கடமை என்றும் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் தெரிவித்துள்ளாா்.