பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மேகாலய சுரங்க விபத்தில் பலியானதாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

மேகாலய நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் பலியானதாக கூறப்பட்ட தொழிலாளி ஒருவர் உயிருடன் வீடு திரும்பியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேகாலய சட்டவிரோத நிலக்கரி சுரங்கம்.

Published On :14 பிப்ரவரி 2026, 10:13 pm IST

மேகாலய நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் பலியானதாக கூறப்பட்ட தொழிலாளி ஒருவர் உயிருடன் வீடு திரும்பியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேகாலயத்தின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தின் தாங்ஸுகு பகுதியில் செயல்பட்டுவந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி திடீரென வெடிவிபத்து நேரிட்டது. சுரங்கம் இடிந்ததில் ஏராளமான தொழிலாளா்கள் உள்ளே சிக்கினா். விபத்தைத் தொடா்ந்து, தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா், சிறப்பு மீட்புக் குழுவினா் உள்ளிட்டோா் பெரிய அளவில் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் இருந்து 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் சுரங்க வெடி விபத்தில் பலியானதாக கூறப்பட்ட அசாமைச் சேர்ந்த தொழிலாளி உயிருடன் வீடு திரும்பியுள்ளார். ஸ்ரீபூமி மாவட்டத்தின் முலியாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு தொழிலாளி ஷியாம்பாபு சிங்ஹா(44) வியாழக்கிழமை வந்தார்.

சுரங்க விபத்தில் அவர் பலியாகிவிட்டதாகக் கூறி குடும்பத்தினரால் ஒரு உடல் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டு பின்னர் தகனமும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அவர் உயிருடன் வீடு திரும்பியது குடும்பத்தினரையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மேகாலய மற்றும் அசாம் போலீஸார் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இதனிடையே சுரங்க விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோரின் முகங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

A labourer reported dead in the East Jaintia Hills coal mine explosion in Meghalaya has returned home in Assam's Sribhumi district, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.